states

img

ம.பி. மாநிலத்தில் ‘சிவன்’, ‘விஷ்ணு’ இருப்பதால் கொரோனா தாக்காதாம்... 3 லட்சம் பேர் இறந்துபோன பின்பும் பாஜக தலைவர் உளறல்...

போபால்:
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் என்ற‘சிவனும்’, பாஜக மாநிலத் தலைவர் விஷ்ணு தத் என்ற ‘விஷ்ணு’வும் இருக்கும்போது மத்தியப் பிரதேசத்தை கொரோனா எப்படி தாக்கும்? என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் டுவிட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களான சிவராஜ் சிங் சவுகானையும், விஷ்ணு தத்-தையும், கடவுளாக சித்தரிக்கும் தருண் சுக் மன்னிப்புகேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.“மத்தியப் பிரதேசத்தில் 2021 ஜனவரி - மே மாதங்களுக்கு இடையில் மட்டும் 3.28 லட்சம் பேர் இறந்துள்ளனர். இது வழக்கமான இறப்பு விகிதத்தைவிட 54 சதவிகிதம் அதிகமாகும். பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே 3,500 பேர் கொரோனாவால் மரணமடைந் தர்கள் என்பது பாஜக மாநில தலைவரின் தகவல். இவ்வாறு மாநிலத்தில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியபோது சிவராஜ் சிங் சவுகானும், விஷ்ணுதத்-தும் எங்கிருந்தார்கள்? தூங்கிக் கொண்டு இருந்தார்களா?” என்று மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “இவ்வாறு சிவன், விஷ்ணுபோன்ற கடவுள்களுடன் தங்களை ஒப் பிட்டுக் கொள்வது இவர்களை போன்ற எதேச்சதிகார, சர்வாதிகாரிகளுக்கு சகஜம்தான்” என்றும் பூபேந்திர குப்தா சாடியுள்ளார்.

;